சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-17

126views
இரண்டு நாட்கள் ஆனது, மறுபடி ஊருக்கு மூவரும் செல்கின்றனர்.
இடம் வாங்கியவர் பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்கிறார்.
வாங்கிய பணம் தாயிடம் கொடுக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்படுகிறது.
சரவணனும் செழியனும் அவரவர் வியாபாரத்தை பார்க்க செல்கின்றனர்.
கவிதாவின் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமென்று குலதெய்வ கோவிலுக்கு போக கிளம்புகிறார்கள்.
கோவிலில் செலுத்துவதற்காக புடவையும் ,வேட்டியும் எடுக்கப்படுகிறது.
அதை ஒரு பையில் வைத்து தேவியிடம் கொடுக்கிறாள் லக்ஷ்மி.
இதை மறக்காமல் எடுத்துக்கொள்.
கோவிலுக்குள் நான் கேட்கும் போது எடுத்துக்கொடு என்று சொல்ல, சரி அத்தை அப்படியே செய்கிறேன்.
அனைவரும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.
தேநீர் அருந்துவதற்காக அனைவரும் இறங்க தேவி மட்டும் எனக்கு வேண்டாம் . நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறாள்.
தேவியின் மகனோ அந்த பையை எடுத்துக்கொண்டு இறங்குகிறான்.
தேனீர் அருந்திவிட்டு அந்தப் பையை அங்கேயே விட்டு விடுகிறான்.
மறுபடி அனைவரும் பேருந்தில் பயணம் செய்ய ஊர் வந்ததும் இறங்குகிறார்கள்.
அங்கிருந்து கோவிலுக்கு நடந்து செல்கிறார்கள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் எடுத்து வைக்க துணி பை மட்டும் காணவில்லை,
லட்சுமி உடனே தேவியிடம் கேட்கிறாள்?
நான் உன்னிடம் கொடுத்து வைக்க சொன்ன துணிப்பை எங்கே?
நான் எல்லாப் பொருட்களையும் எடுத்து வரும்போது துணிவையும் சேர்த்துதான் எடுத்து வந்தேன்.
இப்பொழுது அது மட்டும் எங்கே என்று தெரியவில்லை என்று சொல்ல ,
ஆத்திரமடைந்த லட்சுமி “நீ இதை தெரிந்தேதான் செய்திருக்கிறாய். நான் இவ்வளவு சொல்லியும் அதை எங்கேயோ வைத்து விட்டாய்.”
“நான் கண்டிப்பா அந்த பையை கொண்டு வந்தேன் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது” என்று சொல்ல,
“வேண்டாம் உன் பேச்சு இதோடு நிறுத்திக் கொள்” என்று கோபத்தோடு பேசி முடிக்கிறாள்.
கவிதாவின் மகனோ திட்டுவார்கள் என பயந்து தான் எடுத்ததை மறைத்து விடுகிறான்.
இது எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த செழியன், “நான் போய் மறுபடி வாங்கிக்கொண்டு வருகிறேன் யாரும் இங்கு சண்டை போட வேண்டாம்.”
மறுபடி துணி பையோடு கோவிலுக்குள் நுழைந்த செழியன் தாயிடம் கொடுக்கப்பட்டு பூஜைகள் முடிக்கப்படுகிறது.
தான் ஏதும் செய்யவில்லை என்று தன் கணவரிடம் சொல்ல விட்டு இப்போது அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். தேவி பேச வருவதையே கண்டுகொள்ளாமல் பேச்சை நிறுத்தி விடுகிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறாள் தேவி.
மாப்பிள்ளை வீட்டாரிடம் திருமணத்திற்கு சம்மதமென லக்ஷ்மி தெரிவிக்க திருமண தேதியும் குறிக்கப்படுகிறது.
திருமணத்திற்காக நகைகள் வாங்க வேண்டும் என்று லக்ஷ்மி கவிதாவிடம் சொல்ல என்னிடம் இப்போது சிறிய தொகை மட்டுமே உள்ளது.
நீ அதை அப்படியே வைத்துக்கொள் நான் வாங்கித் தருகிறேன்.
இன்று போய் திருமணத்திற்குத் தேவையான நகைகளை வாங்கி வரலாம். இது தேவியிடம் சொல்லாதே என்று சொல்லிக்கொண்டு இருக்க, தேவி இவர்கள் இருக்கும் அறையில் தேநீருடன் நுழைகிறாள்.
உடனே பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாய் மாறிவிடுகிறார்கள்.
தேவியும் இதை கண்டும் காணாதது போல போய்விடுகிறாள்.
இருவரும் கடைக்கு சென்று நகைகள் வாங்கப்படுகிறது.
வாங்கிய நகையை தன் மகனிடம் மட்டும் காட்டுகிறாள்.
அவனும் நன்றாக இருக்கிறது பத்திரமாக எடுத்து வையுங்கள்.
திருமணத்திற்கு மற்ற பொருட்கள் என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியல் போட்டு வை அப்பொழுதுதான் எதுவும் விடுபடாமல் வாங்க முடியும் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!