118
பெண் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது செழியனும் அவனது மனைவியும் வீட்டிற்குள் வருகிறார்கள்.
தேவி உள்ளே சென்று கவிதாவின் மூத்த மகளை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்.
லட்சுமி சமையலறையில் வருபவர்களுக்கு பலகாரமும் ,தேநீரும் தயார் செய்து கொண்டிருக்கிறாள்.
கவிதாவின் தந்தை வருபவர்களை உபசரிக்க வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வீட்டில் நுழைகிறார்கள்.
வருபவர்களை சரவணனும், செழியனும் வரவேற்று அவர்களை உட்கார வைக்கிறார்கள்.
அவர்களுக்கு தேனீரும், பலகாரமும் தேவியின் மூத்த மகள் எடுத்து வந்து கொடுக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு பெண் பிடித்துவிட்டதால் கல்யாண தேதியை சீக்கிரமாக குறிக்க வேண்டும் என மாப்பிள்ளையின் தாயார் சொல்கிறார்.
உடனே லட்சுமியோ !எங்களுக்கு ஒரு வாரம் நேரம் கொடுங்கள். அதற்குள் நாங்கள் எங்கள் முடிவை சொல்கிறோம் என்று சொல்லி மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைக்கிறாள்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல கவிதாவோ தன் பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு வருகிறாள்.
அன்றிரவு அங்கேயே தங்குகிறாள்.
இரவில் தாயுடன் உறங்க போகிறாள் கவிதா.
தன் தாய் அருகில் படுத்துக்கொண்டு அம்மா இவர் விட்டுச் சென்றதிலிருந்து எனக்கு வருமானம் கிடையாது.
அவர் வீட்டிலிருந்து எனக்கு எந்த சொத்தும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில் என் பிள்ளைகளை நான் எப்படி கரை ஏற்றுவேன் என்று தாயிடம் புலம்புகிறாள்.
லட்சுமி இதை யோசித்து கொண்டே நெடுநேரமாகியும் விழித்துக் கொண்டே இருக்கிறாள்.
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல கவிதா வேலைக்கு கிளம்புகிறாள்.
கவிதா சொன்னதை நினைத்துக்கொண்டே இருக்கிறாள் லட்சுமி.
தன் கணவர் சரவணனிடம் மகள் பேசியதை நினைத்து “நம் மகளுக்கு தான் நாம் எதுவும் செய்ய முடியாத சந்தர்ப்பம் உருவாகிவிட்டது. அதை நம் பேரப்பிள்ளைகளுக்கு செய்துவிட வேண்டும் என்று சொல்ல அப்போது எனக்கு வயது இருந்தது. உழைக்கத் தெம்பு இருந்தது. இப்போது என்னிடம் எதுவும் இல்லை ” என்று சொன்ன சரவணனிடம்
“நீங்கள் ஏன் அதைப்பற்றி யோசிக்கிறீர்கள்? நமக்கு தான் நம் மகன் பெயரில் ஊரில் இடம் இருக்கிறதே அதை விற்று நம் பேரப் பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவு செய்வோம்.”
என்று சொன்ன லட்சுமியிடம் ,
அது மகனின் பெயரில் உள்ளது கண்டிப்பாக மருமகளிடம் கேட்கவேண்டும் .
சொல்ல அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை முதலில் எனக்கு மகன் தான் அடுத்தபடி தான் எனக்கு தேவி.
என் மகனின் முடிவு மட்டும் எனக்கு போதும் என்று கூறிய லட்சுமி.
அன்று இரவே அவளது மகனிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்ல அவனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறான்.
“அம்மா அதை நாளை சென்று அதை விற்பதற்கான வேலைகளை செய்யலாம்.”
“சரிடா நாளையே அதை போய் பார்த்து விற்பதற்கான முயற்சிகளை செய்வோம்.”
“நீ இப்பொழுது சாப்பிட்டு தூங்கு” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
அடுத்த நாள் காலை ஊருக்கு செல்கிறார்கள்.
அங்குபோய் இடத்தை விற்பதற்கான முயற்சியில் ஈடுபடும்போது அந்த ஊரில் உள்ள ஒருவரே நானே அதை வாங்கிக் கொள்கிறேன். என்று வாக்குறுதி கொடுத்து பணத்தை இரு நாட்களில் தருவதாக உத்தரவாதம் இட்டார்.
இதையடுத்து மூவரும் ஊர் திரும்புகிறார்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
👍
நன்றி
Nice