சீனாவில் 18 வயதிற்கு குறைவானவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே ‘விடியோ கேம்ஸ்’ விளையாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த ‘வீடியோ கேம்ஸ்’கள் ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் அனைவரின் கைகளுக்கும் வரத்தொடங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது
இந்நிலையில் விடியோ கேம்ஸ்களை உருவாக்கும் பல நிறுவனங்கள் சீனாவில் இருந்தாலும் சிறார்களுக்கு சில தடைகளை அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்திருக்கிறது. அதன்படி 18 வயதிற்கு குறைவானவர்கள் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ‘ஆன்லைன் கேம்ஸ்’ களை விளையாட முடியும் என அறிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக இதே நடைமுறை இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும் வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரமும் ‘ஆன்லைன்’ கேம்ஸ்களை விளையாட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது பள்ளி மாணவர்களின் கவனம் முழுக்க இந்த இணைய விளையாட்டுகளை நோக்கி நகர்வதால் தினமும் ஒரு மணி நேரமாக குறைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விடியோ கேம்ஸ் நிறுவனமான நிக்கேய் ஆசியா அளித்த தகவலில், நாட்டில் இருக்கும் அனைத்து ஆன்லைன் விடியோ கேம்ஸ் பயனாளர்களின் உண்மையான விவரங்களை அரசு சமர்ப்பிக்க வலியுறுத்தியிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்த புதிய தடை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கல்வித்துறையிலும் சில மாறுதல்களை கொண்டு வர இருக்கிறார்கள்.அதன்படி பீஜிங்கில் வெளிநாட்டு கல்வி சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு சீன அதிபர் ஜின்பிங்கின் சோசலிசம் கருத்துக்களை முதன்மையாக ஆரம்பப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
கேமிங் மீதான தடை பெரிய அளவில் அதைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என டென்சென்ட் கேமிங் நிறுவனம் கூறியதோடு நிறுவன வளர்ச்சியில் 2.6 சதவீதத்தை 16 வயதுடையவர்களே தக்கவைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.