பரவி வரும் கொரோனா.. கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு.. பிரபல நாட்டில் பொது முடக்கம் நீட்டிப்பு..!!
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அவ்வாறு வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கு தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்துள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அங்கு ஏற்கனவே கடந்த நான்கு வார காலமாக அமலில் இருந்த பொதுமுடக்கம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெல்போர்ன் நகரில் பல லட்சம் மக்கள் வசிப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தளர்வில்லாத பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறியதாவது “ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மெல்போர்ன் ஆகும். அந்த நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்கனவே அமலில் இருந்த தளர்வில்லாத பொதுமுடக்கம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற ஓன்று வருவதற்கு முன்பு நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தோம். அந்த நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1305 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் கடந்துள்ளது.