சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 13

102views
ஒரு நாள் அதிகாலை வாங்கி வந்த பசும்பாலை காய்ச்சுவதற்கு எடுக்கிறாள்.
தேவி அதை எடுத்ததும் லக்ஷ்மி அருகில் வந்து “தேவி இது கவிதா வீட்டிற்காக வாங்கி வந்தேன்” நமக்கு வாங்கி வந்து கொடுக்கிறேன். பின்பு பால் காய்ச்சி கொள் என்று சொல்ல தேவி முகம் மாறுகிறது.
இதேபோல் தேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, கவிதாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நாளடைவில் தன் மகளையும், பேரக் குழந்தைகளையும் முதன்மையாக பார்க்க தொடங்குகிறாள்.
இப்படி பாரபட்சமாக பார்ப்பது தேவிக்கு மன உளைச்சலை உண்டாக்குகிறது.
அவளும் இதை அனுசரித்து நடந்து கொள்கிறாள்.
மகளின் 3 குழந்தைகளையும் பள்ளியில் சேர்கிறாள் லக்ஷ்மி.
கவிதாவின் மூத்த மகள் பெயர் பானுமதி, இளைய மகள் துர்கா, கடைக்குட்டி மகன் சக்தி .
மூவருக்கும் பள்ளிக்கு உணவு கட்டிக் கொடுப்பது கிளப்புவது என அனைத்தையும் தேவி பார்த்துக் கொள்கிறாள்.
கவிதாவும் பக்கத்தில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தாள்.
செழியனும் வீட்டில் எப்போதும் கவிதா மற்றும் குழந்தைகள் இருப்பதால் தேவியிடம் பேசும் நேரம் குறைவாகி போனது,
இதனாலேயே பாதி மனம் இறுகி காணப்பட்டாள் தேவி.
இந்நிலையில் ஒருநாள் தேவியை பார்க்க தேவியின் பெற்றோர் வருகிறார்கள்.
அப்போது வேலையை முடித்துவிட்டு வந்த கவிதா வாங்க உங்களுக்கு யார்? வேணும்? என கேட்க
” நீ யாரம்மா ? “என்று தேவியின் பெற்றோரும் கேட்க
“என்னையா யாரென்று கேட்கிறீர்கள்?”
“நான்தான் இந்த வீட்டில் மூத்த மகள்” என்று சொல்ல அதிர்ந்துபோய் பார்த்தார்கள் தேவியின் பெற்றோர்.
“என்னது ?மூத்த மகளா? ”
லக்ஷ்மிக்கு செழியன் மட்டும்தானே என மௌனமாய் யோசிக்கிறார் தேவியின் தந்தை.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்க தூங்கிக் கொண்டிருந்த தேவி எழுந்து ஓடி வருகிறாள்.
“வாங்கப்பா வாங்கம்மா. ஏன்? இங்கேயே நிக்கறீங்க?”
“இல்லம்மா யாரும் காணலையே அதான் குரல் கொடுத்து பார்த்தேன்” என்று சமாளிக்கிறார்.
கடைக்கு சென்று வீடு திரும்பிய லக்ஷ்மியை பார்த்த மகள்
இதுதான் தேவியின் பெற்றோரா? வீட்டுக்குள்ளே வரும்போது நீ யாருன்னு ?
என்னை கேக்குறாங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று தாயிடம் பற்ற வைக்கிறாள்.
கடுப்பாகிப் போன லட்சுமி “என்ன அண்ணா உங்க பொண்ண பாக்க இப்பதான் வழி தெரிந்ததா” என்று கோபமாக கேட்க
“ஊரில் வயக்காட்டில் சிறிது வேலை இருந்துச்சு மா அதனால்தான் என்னால் தேவியை பார்க்க வர முடியவில்லை “என்று சொல்கிறார்.
தேவி தன் பெற்றோருக்கு உணவு எடுத்து வந்து கொடுக்கிறாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே
கவிதா சொல்கிறாள் “உங்கள் மகள் இன்று தான் வேலையே செய்கிறாள் அதுவும் உங்களுக்காக,
இத்தனை நாளாய் என் தாய் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் எல்லா வேலைகளையும் “என்று குத்தலாக சொல்கிறாள்.
வாய் பேசாமல் மௌனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள் தேவி.
இதை கணவரிடம் சொல்ல வேண்டும் என்று துடிக்கிறாள் தேவி
வேலை முடித்து கலைப்பில் உணவு சாப்பிட்டு வந்து தனக்காக பேச காத்திருந்த மனைவியிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் உறங்கச் செல்கிறான்.
இதை பார்த்த தேவி இப்பொழுதெல்லாம் இவர் ரொம்பவே மாறி விட்டார்.
தனக்கான நேரத்தை செலவிடுவதில்லை ,
தனுக்கு யாருமே இல்லாதது போல் தனிமையை உணர்கிறாள்.
7 மாதம் நடக்கிறது இப்போது தேவிக்கு .
பூ வைக்கும் சடங்கிற்காக நாத்தனார் முறைக்கு பூ,பழம், இனிப்பு பலகாரம் வளையல், புடவை இவற்றை கவிதா வைக்கவேண்டும்
என்பதற்காக தாய் லக்ஷ்மியே செலவு செய்து வாங்குகிறாள்.
நேராக எடுத்துவந்து கவிதா வீட்டில் அந்த பொருட்களை வைக்கிறாள்.
வேலையை விட்டு வந்ததும் கவிதா எதற்காக இதெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேட்க
நீதான் ஏழாவது மாதம் இந்த முறை பண்ண வேண்டும் அதற்காக தான் இதை வாங்கி வந்தேன் என்று சொல்கிறாள்.
“ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் பண்ணிட்டா இருக்காங்க எதற்காக பணத்தை வீணடிக்கிறாய்?”
“இல்லம்மா இது ஒரு சடங்கு கண்டிப்பா நீ என் நாத்தனார் என்ற முறையில் செய்தாக வேண்டும்” என்று கூறுகிறாள்.
“நாளைக்கு நம்ம பக்கத்து வீட்டில இருக்கிற சொந்தக்காரங்க மட்டும் கூப்பிட்டு இதை பண்ணிடலாம்.
அதனால வேலைக்கு விடுப்பு கொடுத்து விடு “என்ன சொல்கிறாள் தாய் லட்சுமி.
பார்க்கலாம் ஏழாவது மாதம் பூச்சூட்டு விழாவில் நாத்தனாரின் வேலையை,
  • ஷண்முக பூரண்யா . அ

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!