63
எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர், வழமை போன்றே தொழிலுக்கு செல்ல முடியும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.