உலகம்

‘சிவப்பாய் மாறிய சாக்கடை நீர்…’ காபூல் தாக்குதலை பார்த்தவரின் மிரட்சி அனுபவம்!

92views

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தலிபான்களால் தாக்கப்படுவோம் என்ற பயத்தில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, ​​ஏறக்குறைய 10 மணிநேரம் விமான நிலையத்தின் அபே கேட் அருகே வரிசையில் நின்றிருந்ததாக அடையாளம் வெளியிட விரும்பாத நபர் கூறினார். அவர் அங்கு நிகழ்ந்த துயர சம்பவத்தை விவரிக்கிறார்.

“என் கால்களுக்கு அடியில் இருந்து யாரோ தரையை இழுத்தது போல் இருந்தது. ஒரு கணம் என் காதுகள் வெடித்ததாக எண்ணினேன். அதன் பிறகு எனக்கு காது கேட்கவில்லை, ” என்று ஒரு சர்வதேச மேம்பாட்டுக் குழுவின் ஊழியர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானின் எல்லோரையும் போலவே அவரும், தன்னுடன் எடுத்துச் சென்ற அமெரிக்க சிறப்பு புலம்பெயர்ந்த விசாவின் (SIV) உதவியுடன் நாட்டை விட்டு தலிபான் ஆட்சியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆப்கானிஸ்தான் மக்கள் மனித வெடிக்குண்டுகளுக்கு புதிதில்லை என்றாலும், அன்று வெடித்த குண்டுகள், தங்கள் வாழ்வின் அத்தனை வெடிகுண்டு சம்பவங்களையும் கண்முன் கொண்டுவந்து பித்து பிடிக்க செய்தது.

குண்டுவெடித்த இடங்களை மூடுவதற்கும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஸ்ட்ரக்ச்சரில் எடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பு குழுக்களுக்கும், ஆப்கன் மக்கள் பழக்கமாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இரத்தக் கறை படிந்த சடலங்களின் மீது அழுது கதறுகின்றனர். அவர்களில் பலர் குண்டுவெடிப்பினால் உறவினை இழந்து துடிப்பவர்கள்.

“இன்று இந்த பிரச்சினையை கையாளவோ, உடல்களையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ அல்லது பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவோ யாரும் இல்லை” என்று உயிர் பிழைத்தவர் ஒரு தனியார் பத்திரிக்கையிடம் கூறினார்.

“இறந்த உடல்கள், காயமடைந்தவர்கள் சாலையிலும் சாக்கடையிலும் கிடந்தனர். அதில் பாயும் அழுக்கு நீர் சிவப்பாக மாறியது”. என்றார்

மேலும் அந்த நபர் “பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் சூறாவளி போல உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் காற்றில் பறப்பதை” பார்த்ததாக கூறினார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் முதியவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன.

“இந்த சிறு வாழ்க்கையில் உலக அழிவை பார்ப்பது கடினம், ஆனால் அன்று நான் அதை பார்த்தேன், நான் அதை என் கண்களால் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிகள் இல்லாத நிலையில், குண்டுவெடிப்புக்குப் பிறகு மக்கள் கையடக்க சக்கர வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

“உடல்நிலை நன்றாக தெறி வருகிறது, ஆனால் என் மனநிலை, என் வாழ்நாள் முழுவதும் பழைய நிலைக்கு திரும்பாது என்று நினைக்கிறேன்” என்று முடித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!