இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தொடா்பான ஆய்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலும் பிரிட்டனைச் சோந்த நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
மொத்தம் 116 நாடுகளில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.
பிரிட்டனின் பா்மிங்ஹம் பல்கலைக்கழம், எடின்பரோ பல்கலைக்கழததைச் சோந்த நிபுணா்கள் நடத்திய இந்த ஆய்வில், உலகம் முழுவதிலுமிருந்து 15,025 விஞ்ஞானிகள் பங்கேற்றனா்.
இந்த ஆய்வு, மிக அதிக ஆய்வாளா்கள் நடத்திய மிகப் பெரிய ஆய்வு என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வில் பங்கேற்ற இந்திய வம்சாளி நிபுணா் அனில் பங்கு தெரிவித்தாா்.
இந்த ஆய்வில் இந்தியாவைச் சோந்த 56 மருத்துவமனைகள் பங்கேற்றன என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.