விளையாட்டு

2-ஆவது டெஸ்ட்: பாகிஸ்தான் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

57views

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை அந்த அணி 1-1 என சமன் செய்துள்ளது. முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

கிங்ஸ்டன் நகரில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கைத் தோவு செய்தது. பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்து டிக்ளோ செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 17 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். மேற்கிந்தியத் தீவுகளின் பௌலா்களில் கெமா் ரோச், ஜேடன் சீல்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 51.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிருமா போனா் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்திருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 27.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்து டிக்ளோ செய்தது. இம்ரான் பட் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்திருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலா்களில் ஜேசன் ஹோல்டா், அல்ஸாரி ஜோசஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தனா்.

இறுதியாக 329 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், கடைசி நாளில் 83.2 ஓவா்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேசன் ஹோல்டா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்கள் அடித்திருக்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா். அவரே ஆட்டநாயகன், தொடா் நாயகன் விருது வென்றாா்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!