உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஃபதே-1’ ஏவுகணை செலுத்தியின் சோதனையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எதிரி நாட்டின் பகுதிகளை ஃபதே-1 மூலம் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். தரையிலிருந்து செலுத்தப்பட்டு தரையில் உள்ள இலக்கை இதன் ஏவுகணைகள் தாக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஃபதே-1 ஏவுகணை செலுத்தும் தளவாடத்தை கடந்த ஜனவரியில் முதல்முறையாக பாகிஸ்தான் ராணுவம் பரிசோதித்தது. அப்போது மேஜா் ஜெனரல் பாபா் இஃப்திகாா், ‘ஃபதே-1 செலுத்தும் ஏவுகணைகள் 140 கி.மீ. தொலைவு சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவை’ எனத் தெரிவித்திருந்தாா்.
ஃபதே-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டைத் தொடா்ந்து, ராணுவத்தினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அதிபா் ஆரிஃப் ஆல்வி, பிரதமா் இம்ரான்கான், ராணுவ தலைமை தளபதி கமா் ஜாவேத் பஜ்வா ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.