இந்தியாசெய்திகள்

நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

49views

நாட்டில் முதல் மாநிலமாக கர் நாடகாவில் நடப்பு கல்வி ஆண் டிலேயே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான புதிய திட்டங் களை ம‌த்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நாட்டில் முதல் மாநிலமாக க‌ர்நாடகாவில் ‘தேசிய கல்வி கொள்கை 2020’ நடப்பு 2021- 22 கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

தேசிய கல்வி கொள்கையை நாட்டில் முதல் மாநிலமாக அமல்படுத்தியதற்காக கர்நாடக முதல் வர் பசவராஜ் பொம்மை, கல்வி அமைச்சர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோரை பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் நாட்டில் பிற மாநிலங் களுக்கு கர்நாடகா முன்மாதிரியாக விளங்குகிறது.

தேசிய கல்வி கொள்கையின் காரணமாக நாட்டின் முதல் மாநில மாக கர்நாடகா மிளிரப் போகிறது. அறிவுத் தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என உறுதி யாக நம்புகிறேன். கர்நாடக கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து, பிற மாநிலங்களும் விரைவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகா முதல் மாநிலமாக அமல்படுத்தும் என முன்னாள் முதல் வர் எடியூரப்பா தொடர்ந்து கூறிவந் தார். அவரது வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, தற்போது தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறோம். சிறந்த முறையில் திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் சீரான வேகத்தில் இதனை அமல்படுத்துகிறோம்.

இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால் கள், சிரமங்கள் ஆகியவற்றை பரிசீலித்து உரிய முறையில் சரி செய்யப்படும். மாவட்ட அளவிலும், பல்கலைக்கழகங்கள் அளவிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிக‌ளை நடத்தி மாணவர்கள், ஆசிரியர் களுக்கு விழிப்புணர்வு ஊட்டப் படும். பல்கலைக்கழகங்களில் தரமான ஆராய்ச்சி நடைமுறை களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை விரைவில் தொடங் கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!