148
எதிரில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறுத் தன்னை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குத்தான் எளிதாக வசப்படுகிறது வாழ்வு.
“நான் இப்படித்தான் என் இஷ்டமாக இருப்பேன்,எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை” என்றிருப்பவர்களின் உறவு வட்டம் மிகக் குறுகியது,அதனால் சந்திக்கும் சிரமங்களோ மிக அதிகம்.
இவ்விரண்டு வெவ்வேறு குணங்களின் அடிப்படைக்கு உள்ளடங்கியவர்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் இல்லையா?
சிறு புன்னகையில் நட்பாதலும், முகம் திருப்பிக் கொண்ட பார்வையில் உறவு இழத்தலும்,நாம் சந்திப்பவர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் தின அனுபவங்கள்.
“நீயாக வந்து பேசும் வரை நானும், நானாக வந்து கைகோர்க்க வேண்டுமென நீயும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே நகர்ந்துவிடுகிறது இணையக் காத்திருந்தப் பிணைப்பு.
முகமூடிகளோடுத் திரிதலென்பது அசௌகரியம்தான்.ஆனாலும் பாருங்களேன், இறுதியின் போது எதுவுமே எடுத்து செல்ல அனுமதியாத இந்த வாழ்வில், பிறருக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் தன்மை எப்போதேனும் நம்மிடம் இயல்பாகிவிடுகிறது தானே..?
-
கனகா பாலன்
add a comment