இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

289views
பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி “அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை” எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள்.
தாய் லட்சுமி யோசித்தாள்…
தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள்.
எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன்.
அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார்.
வியாபாரத்தை முடித்த செழியனும் , அவனது தந்தையும் வீடு திரும்புகிறார்கள்.
வீட்டுக்கு வந்ததும்…
லட்சுமி ரெண்டு பெரும் போய் கை கால் அலம்பிட்டு வாங்க……
வந்து சாப்பிட உட்காருங்க….. சொல்லிட்டு போய் உணவு எடுத்துட்டு வர்றா…
சாப்பிட்டு முடிச்சதும் லட்சுமி “ஏங்க…..”
“என்னம்மா”
“இப்படியே இருந்தா எப்படி?…”
“பொண்ணு பாத்துட்டு வந்தாச்சு. கல்யாண தேதி பார்க்கணும்.”
“நாளைக்கு போய் பூசாரியை பார்த்துட்டு நாள் குறித்து விட்டு பொண்ணு வீட்டுக்கு சேதி சொல்லிடலாம்.”
“சரி மா நாளைக்கு போய் பாத்துட்டு அவங்களுக்கு சொல்லிவிடலாம் சரியா….”
“இப்போ எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன்…. மத்த விஷயத்தை காலைல பேசிக்கலாம் “
சொல்லிட்டு போய் தூங்கப் போறார் ..சரவணன்.
விடிந்ததும்… காலையில் எல்லா வேலையும் செய்து முடித்துவிட்டு லக்ஷ்மியும், சரவணனும் திருமண நாள் குறிக்க பூசாரியிடம் சொல்கிறார்கள்.
பூசாரி
“வாங்கம்மா வந்து எவ்வளவு நாளாச்சு ….என்ன இந்த பக்கம்….”
“பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். அதான் ஒரு நல்லநாள் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.”
“அப்போ அடுத்த ஆவணி 10 நல்ல தேதி அன்னைக்கே வைத்திருங்கள்”
சொல்ல அங்கிருந்து கிளம்பினாங்க இருவரும்.
வீட்டுக்கு வந்ததும் லட்சுமி பெண் வீட்டாரிடம் சொல்ல “சரி அன்னைக்கு பண்ணிடலாம்னு அவங்களும் சம்மதம்” சொல்றாங்க….
செழியன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் கல்யாண நாள் குறித்த விஷயம் பற்றி சொல்றா சொன்னதும்.
செழியன் முகத்தில நூறு வாட்ஸ் பல்ப் எரியுது.
திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து முதலில் குலதெய்வத்துக்கு வைக்கிறார்கள்…
பிறகு சம்மந்தி மற்றும் எல்லா உறவினர்களுக்கும் ஒவ்வொரு நாள் சென்று வைக்கிறார்கள்.
திருமணத்திற்கு உடை மற்றும் நகை போன்றவை வாங்க பரபரப்பாக கடைக்கு செல்கிறார்கள்..
நாளை கல்யாணம் இன்று நலுங்கு வைத்து ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது…..
நலுங்கு வைத்த பின்னர் அனைவரும் மண்டபத்திற்கு போறாங்க..
வாசலிலேயே பெண் வீட்டுக்காரங்க மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்..
ஒரே பாட்டும்….
மேளமும்…
உறவினர்களின் பேச்சும் ….சிரிப்பும்….
பார்க்கவே திருவிழா போல இருந்தது.
மணமகள் அறையில் மணப்பெண் அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…
அதேசமயம் மணமகன் அறையில் செழியன் தயாராகிக் கொண்டிருக்கிறான் திருமணத்திற்கு.
மாப்பிள்ளை போய் மணமேடையில் அமர
சிறிது நேரத்தில் மணமகளும் வரா…
கொஞ்ச நேரத்தில் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற சத்தம் முழங்க.
தேவியின் கழுத்தில் திருமாங்கல்யம் இனிதே ஏறுகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்…
  • ஷண்முக பூரண்யா. அ

Right Click & View Source is disabled.

error: Content is protected !!