ரோஹித் ஷர்மா 2011ஆம் உலக கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. அதற்கு அடுத்த 2 உலக கோப்பை தொடர்களில் ( 2015 & 2019 ) இடம் பெற்று மிக சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் குவித்து மொத்தமாக 648 ரன்கள் குவித்தார்.
தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவரிடம் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டி எடுத்தார்.அந்த பேட்டியில் 2011ஆம் உலக கோப்பை தொடரில் இடம் பெறாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் ஷர்மா தற்போது பதில் அளித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்
அந்த உலக கோப்பை தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இருப்பினும் அந்த கனவு எனக்கு நிறைவேறவில்லை. அந்த தொடருக்கு முன்பாக நடந்த ஒரு சில போட்டிகளில் நான் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. அதன் காரணமாக நான் உலக கோப்பை தொடரில் இடம் பெறவில்லை என்று ரோஹித் ஷர்மா தற்பொழுது கூறியுள்ளார்.
அந்த தொடரில் இடம் பெறாமல் போனது என்னுடைய தவறு என்றும் அந்த தொடரில் இடம் பெரும் அளவுக்கு நான் சிறப்பாக பங்களிக்கவில்லை என்றும் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்
2011 உலக கோப்பை தொடருக்கு பின்
அந்த தொடருக்கு பின் நான் நிறைய மாற்றங்களை எனது ஆட்டத்தில் கொண்டு வந்தேன்.குறிப்பாக மனதளவில் நான் நிறைய ஊக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் என்றும் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். என்னுடைய தவறுகள் அனைத்தையும் நான் படி படியாக குறைத்து எனது ஆட்டத்தை மேம்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.
2011ஆம் உலக கோப்பை தொடரில் பங்கெடுக்க ஏன் என்னால் முடியவில்லை என்கிற கேள்விக்கு நான் பதில் தேடி கொண்டேன் என்றும், அந்த இடைவெளி என்னை அப்படியே மாற்றி அமைத்தது என்றும் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இப்பொழுது ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக
நான் விளையாட அந்த இடைவெளி எனக்கு உதவியது என்றும் கூறியுள்ளார்.