தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர், அந்த அணியின் ஸ்ரீதர் ராஜ் 30 ரன்களும், சுரேஷ்குமார் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த கோவை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இறுதிகட்டத்தில் வந்த கேப்டன் ஷாருக்கான் பந்துகளை நாலாபுறமும் சிதற அடித்து அசத்தினார்.29 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தது.
170 என்ற இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது.
அந்த அணியின் அபராஜித் 28 ரன்களும், சூரியபிரகாஷ் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் விக்கெட் கீப்பர் இந்திரஜித் மட்டும் பொறுப்பாக ஆட மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நெல்லை அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது,இதன் மூலம் கோவை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதிவரை போராடிய இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் கோவை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.