செய்திகள்விளையாட்டு

42 கி.மீ தூர மராத்தான்- தங்கம் வென்ற கென்ய வீரர் சாதனை

55views

ஒலிம்பிக் போட்டியின் உச்சபட்சமாக தடகளம் கருதப்படுகிறது. நடப்புத் தொடரில், அதிகபட்சமாக 48 பிரிவுகளில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதே இதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதில், 100 மீட்டர், 200 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப் போட்டிகளில் ஏற்கெனவே முடிந்த நிலையில், கடைசி நாளில், இறுதி தடகள போட்டியாக மாரத்தான் நடைபெற்றது.

42 கிலோ மீட்டர் தூர இலக்கை கொண்ட இப்போட்டியில், மொத்தம் 106 பேர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும், வீரர்கள் இலக்கை நோக்கி சீராக ஓடத் தொடங்கினர். இதில், தொடர்ந்து வேகம் காட்டிய கென்ய வீரர் எலியட் கிப்சாஜ், 2 மணி நேரம் 8.38 நிமிடங்களில் இலக்கை கடந்து, முதலிடம் பிடித்து தன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

இவரையடுத்து, நெதர்லாந்து வீரர் அப்தி நாகியே இரண்டாவது இடமும், பெல்ஜியம் வீரர் பஷீர் மூன்றாவது இடமும் பிடித்து முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். 106 பேர் பங்கேற்ற இப்போட்டியில் 76 பேர் மட்டுமே இலக்கை கடந்தனர்.

மேலும், தொடர்ந்து இரண்டாவது முறை ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று எலியட் சிப்சாஜ் சாதித்தார். முன்னதாக, ஒலிம்பிக் மாரத்தானில் தொடர்ந்து 2-வது முறை பதக்கம் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார். முன்னதாக, எத்தியோப்பியாவின் அபே பிகிலா (Abebe Bikila), ஜெர்மனியின் சியர்பின்ஸ்கி (Cierpinski) இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மகளிருக்கான மாரத்தான் போட்டியில் கென்யாவின் பெரஸ் ஜெப்சிர்சீர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு கென்ய வீராங்கனை பிர்ஜிட் கோஸ்கி (Brigid Kosgei) வெள்ளியும், அமெரிக்காவின் மோலி சீடல் (Molly Seidel) வெண்கலப் பதக்கமும் வென்றனர். டோக்யோ ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் மாரத்தானில் கென்ய வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்ததால், இரட்டைத் தங்கம் கிடைத்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!