உலகம்

543 நாள்களுக்குப் பிறகு வங்கதேசப் பள்ளிகள் திறப்பு

116views

வங்கதேசத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 543 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

அந்த நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்த அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகள் அலட்சியம் செய்யப்பட்டு, நோய்த்தொற்று தீவிரமடைந்தால் அவை மீண்டும் மூடப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!