முதுபெரும் கவிஞர் காமகோட்டியான் வயது மூப்பால் இன்று சென்னையில் மரணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காமகோடியன்.
இவரது இயற்பெயர் சீனிவாசன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களை எழுதியிருக்கும் அவர் இறுதி காலம் வரையில் அவருடனே பணியாற்றி வந்தார். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி பல மொழி மாற்றுத் திரைப்படங்களையும் காமகோடியன் எழுதியிருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தவிர இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக கடந்த 2002-ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில், காமகோட்டியான் எழுதிய ‘௭ன் அன்பே ௭ன் அன்பே’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 76 வயதாகும் கவிஞர் காமகோட்டியான் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.