தமிழகம்

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி பள்ளியில் 19 வருடங்களுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவ மாணவிகள்.

332views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் 19 வருடங்களுக்கு பின்பு தங்கள் குழந்தைகளுடன் வந்து படித்த பள்ளிக்கூடத்தில் முன் ஞாபகங்கள் நினைவுபடுத்தும் விதத்தில் விழா நடத்தி கொண்டாடினார். இந்த பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை-ஆசிரியர்- இன்ஜினியர் என பல்வேறு வேலைவாய்ப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.தற்போது 19 வருடங்களுக்குப் பின் பள்ளியில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.தாங்கள் படித்த பள்ளி வகுப்பறையில்; தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து தங்;கள் பள்ளி கால பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.இதில் தற்போதைய காலகட்டத்தை விட பள்ளியில் படித்த காலங்கள் மிகவும் இனிமையாக இருந்ததாகவும் ஒருவரையொருவர் முன் ஞாபகங்களை பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் பள்ளி முன் நின்று அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். 19 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவ மாணவிகள் பள்ளியில் சந்திப்பது பாப்பாபட்டி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!