உலகம்

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ’கடல் டிராகன்’ புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

56views

இங்கிலாந்து நாட்டின் நார்த் லிசென்ஸ்டர்ஷுரே பகுதியில் ரூத்லேண்ட் என்ற இடத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. தீவில் அமைந்துள்ள இந்த ஏரி பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜோ டேவிஸ் என்ற ஆராய்ச்சியாளர் வித்தியாசமான வடிவிலான புதைபடிமம் மண்ணில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, வித்தியாசமான உயிரினத்தின் புதைப்படிமம் மண்ணில் புதைந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், ஜோ டேவிஸ் தனது குழுவினர் மற்றும் தொல்லியல் துறையினருடன் இணைந்து ஆய்வுப்பணியில் மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் ஆற்றுப்படுகை பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்ட அந்த புதைப்படிமம் ‘கடல் டிராகன்’ என்ற உயிரினம் என்பது தெரியவந்தது. இன்ஞ்ச்யோசரஸ் என்று அழைக்கப்படும் அந்த கடல் டிராகன் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினம் என்பது தெரியவந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த புதைபடிமம் 10 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது.

இந்த கடல் டிராகனின் தலைபகுதி மட்டுமே மியானோ இசைக்கருவியின் அளவுக்கு உள்ளது. மேலும், அதன் எடை ஒரு டன் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடல் டிராகன் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தீவிர ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!