இந்தியா

12 மணி நேர வேலை, 15 நிமிடத்திற்கு அதிகமாக பணியாற்றினால் ஓவர் டைம் – புதிய ஊதிய குறியீடு மசோதா!

73views

ற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அதன்படி அதிகபட்ச வேலை நேரம் 12 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த 12 மணி நேரம் வேலை அமல்படுத்தப்பட்டால், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் மற்ற மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

முன்பிருந்த கணக்கீட்டின் படி, இந்த 12 மணி நேர வேலையை தவிர்த்து 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வேலை செய்தாலும் அது கூடுதல் நேர வேலையாக கருதப்படாது, அதற்கான ஊதியமும் கிடையாது. ஆனால், தற்பொழுது 12 மணி நேர வேலையை தவிர்த்து 15 நிமிடத்திற்கு மேல் 1 நிமிடம் வேலை செய்தால் கூட அது ஓவர் டைம் வேலையாக கணக்கிடப்பட்டு அதற்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 மணி நேரத்திற்கு அதிகமாக தொடர் வேலை செய்யக்கூடிய முறை தடை செய்யப்பட்டுள்ளதுடன், கட்டாயம் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 நிமிட இடைவேளை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை ஏப்ரல் 1 ஆம் தேதியே அமலாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், கொரோனா பரவல் காரணமாக சில நிறுவனங்களில் மட்டுமே இந்த நடைமுறை கொண்டுவர பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!