விளையாட்டு

ஸ்பெயினிடம் வீழ்ந்தது இத்தாலி முடிந்தது வெற்றி நடை

58views

கால்பந்து அரங்கில் இத்தாலியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. தேசிய லீக் அரையிறுதியில் 1-2 என ஸ்பெயினிடம் வீழ்ந்தது.

ஐரோப்பிய அணிகளுக்கான தேசிய கால்பந்து லீக் தொடர் தற்போது நடக்கிறது. மிலனில் நடந்த இதன் முதல் அரையிறுதியில் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் மோதின. ஸ்பெயினிடம் வீழ்ந்தது இத்தாலி  முடிந்தது வெற்றி நடை

முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+2 வது) மீண்டும் அசத்திய டோரஸ், மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இத்தாலி வீரர்கள் போராடிய போதும், ஸ்பெயின் ஸ்கோரை சமன் செய்ய முடியவில்லை. போட்டியின் 83வது நிமிடம் இத்தாலி அணிக்கு பெல்லேகிரினி ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் இத்தாலி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

யூரோ சாம்பியன் இத்தாலி அணி, கடைசியாக 2018 செப். ல் போர்ச்சுகலுக்கு எதிராக இத்தாலி தோற்றது. இதன் பின் சர்வதேச கால்பந்து அரங்கில் தொடர்ந்து 37 போட்டிகளில் தோற்காமல் (30 வெற்றி, 7 ‘டிரா’) வலம் வந்த அணி என புதிய சாதனை படைத்து இருந்தது. இந்த போட்டிகளில் 93 கோல் அடித்த இத்தாலி, 12 கோல் தான் எதிரணிகளுக்கு விட்டுக் கொடுத்தது. ஸ்பெயினிடம் வீழ்ந்ததை அடுத்து இத்தாலி அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!