வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் படங்களுக்கென்று மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
ஆனால் தற்போது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வட சென்னை படத்தில் இடம்பெற்றிருந்த ராஜன் கதாபாத்திரத்தின் இளவயது கதையை வைத்து ‘ராஜன் வகையறா’ எனும் திரைப்படத்தை இயக்க தயாராகிறார் வெற்றிமாறன். இத்திரைப்படத்தில் ராஜனின் சிறுவயது கதாபாத்திரத்தில் அசுரன் படத்தில் தனுசுக்கு மகனாக நடித்த கென் கருணாஸ் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.