தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கினார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. பேய் படம் என்பதால் பிசாசை காட்டி மிஷ்கின் பயமுறுத்தியிருப்பார் என ஆவலோடு பார்த்தால் குளியல் தொட்டியில் ஒரு பெண் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக படுத்திருக்கும் காட்சி அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 18ம் தேதிக்குள் இப்படத்தை முடித்துவிட இயக்குனர் மிஷ்கின் திட்டமிட்டுள்ளாராம். அதன்பின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெறவிருக்கிறது.




