நடிகர் சூரி பல படங்களில் பிரபலமானவராக காமெடி கேரக்டரில் நடித்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்த முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
சிவகார்த்திகேயன் முதல் ரஜினிகாந்த் வரை தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலான விடுதலை திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இதனிடையே அண்மையில் நடிகர் சூரி, ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடித்த உடன்பிறப்பே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளியை முன்னிட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இந்த படத்தில் ‘பச்சைக்கிளி’ எனும் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் ‘உடன்பிறப்பே’ படம் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா & சூர்யாவால் தயாரிக்கப்பட்டது. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்த அக்டோபர் மாதம் நேரடியான வெளியானது.இப்படத்தில் சூரி காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இதேபோல் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மற்றும் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைத் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்து. சூர்யாவுடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில், 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையிலான திருட்டு கேஸ் என்கிற பெயரில் பிடித்துச் செல்கின்றனர். ஆனால் அப்பாவியான அவர்கள் மீது பொய் கேஸ் போட்டு மனித உரிமை அத்துமீறல் செய்கின்றனர்.
இதற்கான நீதியை, வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, நீதிமன்றத்தில் வழக்காடி, அதாவது சட்டப்படி போராடி பெற்றுத்தருகிறார். இந்த படம், தான் சொல்ல வந்த கதையை அழுத்தமாகவும், வலுவானதாகவும் சொல்லி இருப்பதாக பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை.
இந்நிலையில் இப்படம் குறித்து தமது ட்விட்டரில் பதிவிட்ட சூரி, “இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் ஜெய்பீம் – படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை.” என குறிப்பிட்டுள்ளார்.