செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் : நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேற்றம் .!!!

74views

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் .

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் உலகில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் , இங்கிலாந்து வீரரான ஜேக் டிராப்பரை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிராப்பர் கைப்பற்றினார்.இதையடுத்து அதிரடி காட்டிய ஜோகோவிச் அடுத்தடுத்து 3 செட்களை வென்று அசத்தினார். இறுதியாக ஜோகோவிக் 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!