விமானங்களில் பணிப்பெண்கள் இருப்பதுபோல ரயில்களிலும் பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்து உள்ளது.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயணியர் வசதி மற்றும் பாதுகாப்புக்கு ரயில்வே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ரயில்களில் பயணியருக்கு உதவும் பணியில் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.விமானங்களில் பயணியருக்கு உதவும் பணியில் பணிப்பெண்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதுபோல ரயில்களிலும் பணிப்பெண்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ‘சதாப்தி, ராஜ்தானி’ போன்ற நீண்ட துாரம் பயணம் செய்யும் ரயில்களில் பணிப்பெண்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். குறுகிய துாரம் பயணிக்கும் தேஜஸ் போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் முதல்கட்டமாக பணிப்பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
விருந்தோம்பலில் நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் தான் இந்த பணியில் நியமிக்கப்படுவர்.ரயில்களில் ஏறும் பயணியரை வரவேற்பது, பயணியருக்கு உணவு வழங்குவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். மேலும் ரயில்களில் பகல் நேரத்தில் மட்டுமே பணிப்பெண்கள் பணியாற்றுவர். இவ்வாறு அவர் கூறினார்.டீசலில் இயக்கப்படும் 37 சதவீத ரயில்கள்ராஜ்யசபாவில் நேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:நாட்டில் தற்போது தினமும் சராசரியாக ௧௩ ஆயிரத்து ௫௫௫ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ௩௭ சதவீத ரயில்கள் டீசல் இன்ஜினாலும், மற்றவை மின்சார இன்ஜினாலும் இயக்கப்படுகின்றன.கடந்த 2019 – ௨௦ம் ஆண்டில் ௨௩ ஆயிரத்து 700 லட்சம் லிட்டர் டீசலையும், ஒரு லட்சத்து ௩௮ ஆயிரத்து ௫௪௦ லட்சம் கிலோ வாட் மின்சாரத்தையும் ரயில்வே பயன்படுத்தியுள்ளது. இதன்படி ரயில்வே தினமும் ௬௫ லட்சம் லிட்டர் டீசலையும், ௩௭௯ லட்சம் கிலோ வாட் மின்சாரத்தையும் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.