சினிமா

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு முடிவடைந்தது

87views

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கோப்ரா.

கடந்த மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார். விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டு காலத்தில் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ள அஜய் ஞானமுத்து, கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!