”வருமான வரி செலுத்துவோருக்கான புதிய தரவு தளத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க வேண்டும்” என இன்போசிஸ் நிறுவனத்திடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.வருமான வரி செலுத்துபவர்களுக்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் பயன்பாட்டிற்க வந்த இந்த தளம் பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
இதுதொடர்பான அமைச்சகத்தின் அறிக்கை: வரி செலுத்துவோர் பயன்படுத்துவதற்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.அப்போது இந்த தரவு தளம் வரி செலுத்துவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு குறைபாடுகளுடன் அமைந்துள்ளதாக கூறினார். தொழில்நுட்ப குறைபாடுகளை விரைந்து சீரமைக்கும்படி இன்போசிஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் கூறி உள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.