விளையாட்டு

வரம்பு மீறும் ரசிகர்கள்! தேநீர் இடைவெளியா? திட்டும் நேரமா?

36views

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் – பேர்ஸ்டோ ஆகியோர் தொப்பையை வைத்து கிண்டல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதல் 3 போட்டிகளில் ஏற்கனவே தோற்று தொடரில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மீதமுள்ள போட்டிகளில் வென்றாவது கவுரவமாக செல்ல முயன்று வருகிறது. படுக்கைக்கு அழைத்த மாடலுக்கு ரூ.50 லட்சம்.. தீபிகா படுகோனேவுடன் காதல்.. ஜோகோவிச் மீதான 5 சர்ச்சைகள்! 2வது டெஸ்ட் போட்டி எனினும் இந்த போட்டியிலும் சொதப்பல் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416/8 சேர்த்து டிக்ளர் செய்த போது இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை பறிகொடுத்தது. கவலைக்கிடமாக இருந்த அந்த அணியை பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி தான் மீட்டுக்கொண்டு வந்தனர். வலுவான பார்ட்னர்ஷிப் 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 66 ரன்களுக்கு நாதன் லையன் பவுலிங்கில் வெளியேறிய நிலையில் மறுமுணையில் தூண் போன்று நின்ற பேர்ஸ்டோ சதமடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து அந்த அணி 3ம் நாள் முடிவில் 258 ரன்கள் எடுத்துள்ளது. இப்படி இங்கிலாந்து அணியை பாதுகாத்த ஸ்டோக்ஸ் – பேர்ஸ்டோவை உடல் உருவத்தை வைத்து கேலி செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கிண்டலடித்த ரசிகர் ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸ் முடிந்து பேர்ஸ்டோ – ஸ்டோக்ஸ் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர், ஸ்டோக்ஸ் நீ ரொம்ப குண்டாக இருக்கிறாய், பேர்ஸ்டோ நீ கொஞ்சம் உடல் எடையை தான் குறைக்கலாமே பா.. தொப்பை வெளியே தெரிகிறது.. உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்’ என கிண்டலடித்தார். தரமான பதிலடி தன்னை கிண்டலடித்த போது அமைதிகாத்த பென் ஸ்டோக்ஸ், தனது நண்பர் பேர்ஸ்டோவை ஒரு வார்த்தை கூறியவுடன் கடும் கோபமடைந்தார்.

அந்த ரசிகரிடம் அவர், நண்பரே நீ கூறுவது சரி தான்.. நாங்கள் குண்டாக தான் உள்ளோம்.. ஆனால் உன்னை பார்.. சிறுநீரைப்போன்று மிக பலவீனமாக இருக்கிறாய்.. அப்படியே திரும்பி ஓடிவிடு” என கடுமையான பதிலடி கொடுத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐசிசி நடவடிக்கை என்ன மிகவும் பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இது போன்ற சர்ச்சைகள் எழுவது இது முதல் முறையல்ல. உருவ கேலிகள், ரசிகர்களுக்கு இடையேயான சண்டைகள் என பல பிரச்சினைகள் இதற்கு முன் இருந்துள்ளன. இவற்றிருக்கு ஐசிசி தலையிட்டு ஆரோக்கியமான கிரிக்கெட்டை விளையாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கோரிக்கை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!