மிசோரமிலும், வங்கதேச – இந்திய எல்லையான சிட்டகாங்கிலும், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோல்கட்டா, கவுகாத்தியிலும் நிலநடுக்கத்தை உணர முடிந்தது.வங்கதேச – மியான்மர் எல்லையான சிட்டகாங்கில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.3 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இந்திய மாநிலமான மிசோரமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்சாவலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ஆக ரிக்டரில் பதிவாகி இருந்தது.கோல்கட்டா, கவுகாத்தியிலும் நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மியான்மர், பூடான், மற்றும் சீனாவிலும் நிலநடுக்கம் உணர முடிந்தது. நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.