இந்தியா

லட்சத்தீவு அதிகாரியை திரும்ப பெறவேண்டும். அதிகரிக்கும் எதிர்ப்பு!

73views

ட்சத்தீவில் பாஜகவால் நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன.

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில் முக்கியமாக அங்கு குழந்தைகளின் உணவில் மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த தீவுகளில் உள்ள 60000 மக்களும் அவர் மேல் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து இப்போது அந்த அதிகாரியை மத்திய அரசு திரும்பி பெறவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!