சினிமா

ரிலீஸ் தேதியுடன் வெளியானது வலிமை டிரைலர்

92views

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் ரிலீஸுக்காக தயார் நிலையில் உள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

படத்தின் ஹீமா குரோஷி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என படக்குழு காலையில் அறிவித்தது.

அதன்படி தற்போது படத்தின் டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. படத்தில் ஒவ்வொரு சீனும் சும்மா தெறிக்குது என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!