தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

98views

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்றனர்.

அப்போது,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,பின்னர் அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

இதனையடுத்து,எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை பிப்.11-ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையிலடைக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே,கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகிறது.இந்நிலையில்,இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!