Russian President Vladimir Putin, center, escorted by Russian Defense Minister Sergei Shoigu, right, and General Staff Valery Gerasimov walk after attending an extended meeting of the Russian Defense Ministry Board at the National Defense Control Center in Moscow, Russia, Tuesday, Dec. 21, 2021. The Russian president on Tuesday reiterated the demand for guarantees from the U.S. and its allies that NATO will not expand eastward, blaming the West for current tensions in Europe. (Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP)
உலகம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு – பிரதமர் போரிஸ் ஜான்சன்

57views

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள, ரஷ்யா நாட்டின் மீது, பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தெரிவித்துள்ளார்.

‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது, ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஒரு நாடு, சர்வதேச அளவில் உள்ள சட்டத்தை மீறும்போதோ, பயங்கரவாத செயலில் ஈடுபடும்போதோ, அந்நாட்டுக்கு எதிராகப் பல தடைகள் (sanctions) விதிக்கப்படும். அந்த தடைகளில் ஒன்றான பொருளாதாரத் தடையை ரஷ்யா மீது, பிரிட்டன் விதிக்க முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘தங்களின் நட்பு நாடுகளும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வந்துள்ளன. உக்ரைன் மீது மிகப்பெரிய வன்முறையை புடின் நிகழ்த்தியுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தார். அமெரிக்காவும், ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்நிலையில், பிரிட்டனும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க முன்வந்துள்ளது. இதற்கிடையில் உக்ரைனுக்கு உறுதியாக இருப்போம் என்று ஜி7 நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!