உலகம்

ரஷ்யாவில் சோனி மியூசிக், டிஸ்னி, அமேசான் நிறுவனம் சேவையை நிறுத்தியது

39views

உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக சோனி மியூசிக், டிஸ்னி, அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 16வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவுக்கு பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவையை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளன.

தற்போது ரஷ்யாவில் திரைப்பட வெளியீட்டையும், வணிகங்களையும் நிறுத்திக் கொள்வதாக டிஸ்னி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக பிரபல மியூசிக் நிறுவனமான சோனி அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!