இந்தியா

மோடி தேசத்திலிருந்து வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள்; இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை மோடி உயர்த்தியுள்ளார்: அமித் ஷா பெருமிதம்

55views

பிரதமர் மோடியால் இந்தியாவின் பாஸ்போர்ட் மதிப்பு உயர்ந்துள்ளது. மோடி நாட்டிலிருந்து வருகிறீர்களா என வெளிநாட்டினர் வியப்புடன் கேட்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்தோடு தெரிவித்தார்.

கோவாவின் பானாஜி நகரில் பாஜகவின் காரியகர்த்தா சம்மேளன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியாவது:

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டால், ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது, ஜம்மு காஷ்மீரில் 370-பிரிவு சட்டத்தையும் ரத்து செய்திருக்க முடியாது. கோவாவிலும் 2022ம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சுதந்திரத்துக்குப்பின் அனைத்து அ ரசியல் கட்சிகளும் செயல்பட்டன, ஆனால், பாஜகவில் மட்டும்தான் அதன் ஆத்மா என்பது தலைவராக இல்லை. 2024ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது.

இந்தியவைப் பார்க்கும் பார்வை உலகளவில் இன்று மாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் கப்பல் மாலுமிகள் வந்து செல்லும்பகுதி கோவா என்பது உங்களுக்குத் தெரியும். இந்த மாலுமிகளிடம் சென்று கேளுங்கள், இதற்கு முன் இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தால், அதைப் பார்ப்பவர்கள் எவ்வாறு எதிரிவினையாற்றினார்கள். இப்போது இந்திய பாஸ்பாோர்ட்டைப் பார்த்து வெளிநாட்டினர் என்ன கூறுகிறார்கள் எனக் கேளுங்கள்.

இப்போது எந்த வெளிநாட்டு அதிகாரியும் இந்தியப் பாஸ்போர்ட்டைப் பார்த்தால் சற்று புன்னகைத்த முகத்துடன், நீங்கள் மோடி தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்களா என்றுவியப்புடன் கேட்கிறார்கள்.

பிரதமர் மோடி இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளார். பாஜக தேர்தலில் பெரும்பான்மை பெற்றதால்தான் இது சாத்தியமானது. ஆதலால், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!