‘மோடி அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் சலிப்படைந்து விட்டனர்’: காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்
பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய மோடி அரசு உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ.105 அதிகரிக்கப்பட்டு ரூ.2,000- த்தை தாண்டியுள்ளது. இதனிடையே 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 7 ஆம் தேதி முடிந்தவுடன், பெட்ரோல்-டீசல் விளையும் அதிரடியாக உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து காங்கிரசின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘மோடி அரசின் சலிப்பான கொள்கைகளால் மக்கள் சலிப்படைந்து, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை நினைத்து பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஒன்றிய மோடி அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. இன்று எல்பிஜி என்றும், நாளை பெட்ரோல்-டீசல்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.