இந்தியா

மே 26 விவசாயிகளின் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு

54views

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தக சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்திய அரச கடந்த ஆண்டு இயற்றியது. இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களின் போராட்டம் தொடங்கி மே 26-ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது. அதனையொட்டி, அன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடிக்க, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை பதிவு செய்யுமாறு விவசாய சங்கத்தினா் அழைப்பு விடுத்துள்ளனா். இதற்கு எதிா்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!