இந்தியா

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க டிசம்பர் 17-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

53views

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் கடந்த செப்டம்பர்27-ம் தேதி நடைபெற்றது. அதில் கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை நிகழ்ச்சி நிரலில் ஏற்க கூடாது என வலியுறுத்தியது.

இந்நிலையில் ஆணையத்தின் 15-வது கூட்டம் வரும் டிசம்பர் 17-ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நீர்வளத்துறை ஆணைய அலுவலகத்தில் அதன் முழு நேரத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசம்பர் 17-ம் தேதி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும், காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!