துரித உணவு

மும்பை பாவ் பாஜி செய்வது எப்படி ?

988views

தேவையான பொருட்டுகள்

2பாவ் பன்
4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
பாஜி செய்ய :
1உருளைக்கிழங்கு
1/4 கப் கேரட், பீன்ஸ்
1/4 கப் காலிஃவர்
1சிறிய குடைமிளகாய்
1/4 கப் பிரெஷ் பச்சை பட்டாணி
1 பெரிய தக்காளி
2பெரிய வெங்காயம்
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
1+2டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
2டேபிள் ஸ்பூன் பாவ் பாஜி மசாலா தூள்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பாஜி செய்ய மேலே கொடுத்துள்ள எல்லா காய் களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பின்பு ,வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பிரஷ் பச்சை பட்டாணி இல்லையெனில், காய்ந்த பட்டாணியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில், தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள எல்லா காய்களையும், குக்கரில் வேகவைத்து அல்லது ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்.

பின் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி, வெந்த பட்டாணி, வெந்த காய்களை சேர்த்து வதக்கவும்.

கொஞ்சம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் எல்லாவற்றையும் மாசிக்கும் கரண்டி வைத்து நன்கு மசிக்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கவும். இப்போது பாவ் பாஜி மசாலா தயார். மேலே ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

பாவ் பன்னை நடுவில் கட் செய்து, வெண்ணெய் தடவி சூடான தோசை தவாவில் வைத்து ஒரு நிமிடம் விட்டு, அதே போல் அடுத்த பக்கமும் வெண்ணெய் தடவி ஒரு நிமிடம் சூடு செய்து எடுக்கவும். இப்போது பாவ் பன் தயார்.

பாஜி மேல் கொஞ்சம் வெண்ணெய் வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி தூவி, பாவ் பன் மேல் கொஞ்சம் வெண்ணெய் வைத்து சூடாக பரிமாறவும்.

 

சுவையான மும்பை ஸ்டைல் பாவ் பாஜி சுவைக்கத்தயார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!