தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

50views

திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியில் 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.

திமுகவை சேர்ந்த நரேஷ் என்ற அந்த நபரை பிடித்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அவரை தாக்கி, சட்டையை கழற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது, கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!