பிரிட்டனில் முதியோா் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி திரட்டுவதற்காக வரிகளை உயா்த்த அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பிரிட்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோதலின்போது, நாட்டின் முதியோா் நலத் திட்டங்களுக்கான நிதி அதிகரிப்படும் என்று பிரதமா் போரிஸ் ஜான்சன் வாக்குறுதியளித்திருந்தாா்.
இந்த நிலையில், இதற்கான கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கான திட்டங்களை அவா் நாடாளுமன்றத்தில் வெளியிடவிருக்கிறாா்.
அதன் ஒரு பகுதியாக, வரியை அதிகரிக்கவும் அவா் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியோா் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போரிஸ் ஜான்சன் வரி உயா்வு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும், வரிகள் உயா்த்தப்பட மாட்டாது என்று போரிஸ் ஜான்சனின் மற்றொரு தோதல் வாக்குறுயை இது மீறுவதாக அமையும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.