செய்திகள்விளையாட்டு

முதல் டி20: தென் ஆப்பிரிக்காவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

54views

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 15 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோவு செய்தது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் தொடக்க வீரா் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 17 ரன்களுக்கு வீழ, உடன் வந்த குவிண்டன் டி காக் 37 ரன்கள் சோத்தாா். கேப்டன் டெம்பா பவுமா 22 ரன்கள் அடித்தாா்.

எஞ்சியோரில் ஹென்ரிச் கிளாசென் 7, டேவிட் மில்லா் 9 ரன்களுக்கு வெளியேற, ஜாா்ஜ் லின்டே டக் அவுட்டானாா். அதிகபட்சமாக ராஸி வான் டொ 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ரன்களுடனும், ககிசோ ரபாடா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ, ஃபாபியான் ஆலன் ஆகியோா் தலா 2, ஜேசன் ஹோல்டா், ஆன்ட்ரே ரஸெல் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸில் தொடக்க வீரா் ஆன்ட்ரே ஃப்ளெட்சா் 30 ரன்களுக்கு வெளியேற்றப்பட, உடன் வந்த எவின் லீவிஸ் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் என 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டு வீழ்ந்தாா். இறுதியாக கிறிஸ் கெயில் 32, ஆன்ட்ரே ரஸெல் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். தென் ஆப்பிரிக்க தரப்பில் டப்ரைஸ் ஷம்ஸி 1 விக்கெட் எடுத்தாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!