தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

82views
கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.
கூட்டத்தில், தென் மாநிலங்களில் நிலவும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை, உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில், திருவனந்தபுரம் செல்கிறார். மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார்.
சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி விவகாரம், நெய்யாறு பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.மேலும், ஏற்கனவே நீர்வளத்துறை செயலர்கள் நடத்திய பேச்சுகள், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது.
மாலை கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இரவு திருவனந்தபுரத்தில் தங்குகிறார்.நாளை காலை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கூட்டம் முடிந்து இரவு 7:00 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!