சினிமா

முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் மனோகரி..

49views

மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், ஐ.எம்.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சிட்தி ‘ படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘மனோகரி ‘ என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.

முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் மறைந்த பிரபல நடிகர் கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் வில்லனாக நடிக்கிறர். இவர் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர்.

மேலும், ஆண்டி இந்தியன் ஜெயராஜ், தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது, ”நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.

படப்பிடிப்பு கம்பத்தில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது’ என்றார்.

படத்துக்கு கார்த்திக் ராஜா இசை அமைக்க, கே.வி.மணி ஒளிப்பதிவு செயதுள்ளார்.

எடிட்டிங் – SP அஹமது. கலை – தென்னரசு, ஸ்டண்ட் – S.சுரேஷ், நடனம் – ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை – ஹக்கீம் சுலைமான், மக்கள் தொடர்பு – மணவை புவன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!