இலக்கியம்கட்டுரை

மீல்ஸ் ஃபார் ஆல்

290views
கொரோனா பெரும் தொற்றானது மக்களையும், மக்கள் வாழ்க்கை முறையையும் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது.மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் கூட சென்று சேர விடாமல் அச்சுறுத்தி வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சாதாரண, பாமர மக்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உணவு மட்டுமே.
இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஈக்கோ கிச்சன்(Eco Kitchen) என்னும் தன்னார்வ அமைப்பு, அம்மாதிரியான மக்களின் பசித் தேவையை உணர்ந்து பூர்த்தி செய்து வருகிறது. அந்நிறுவனம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை(எக்மோர்), சாந்தம் சாலையோர பகுதிகளில் உணவுத் தேவை இருக்கும் மக்களைக் கண்டறிந்து உணவை வழங்கி வருகின்றது.

கொரோனா ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதலே, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் திரு.வெங்கட் அவர்களின் தூண்டுதலால்,’மீல் பார் ஆல்’ என்ற பிரச்சாரத்தை ஈக்கோ கிச்சன் நிறுவனம் ஆரம்பித்தது. முதலில் வெறும் நான்கைந்து நண்பர்களின் உதவியைப் பெற்று ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரம், பின் அதிகமான நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியால் நிறைய இடங்களில் இருக்கக் கூடிய உணவுத் தேவையைப் போக்கியது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 50 முதல் 60 நபர்களின் பசியை தீர்த்த இந்நிறுவனம் இன்று 200 முதல் 300 நபர்கள் பசியை தீர்த்து வருகிறது. இந்நிறுவனம், ‘மீல் பார் ஆல்’ பிரச்சாரத்தின் மூலம் 15,000-க்கும் அதிகமான மக்களின் பசியை தீர்த்து உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவனைத்தும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி மிகவும் சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றுக்காலத்திற்கு முன்புவரை ஈக்கோ கிச்சன் என்னும் இந்த நிறுவனம் கதிர்தான் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம், மாற்றுத்திறனாளர் மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி வந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவராக டாக்டர்.சுனில் சாலமன் அவர்களும், தலைமை திட்ட அதிகாரியாக திரு.ஏ.கே.கணேஷ் மற்றும் மேலாளராக திருமதி.சேதுலட்சுமி அவர்களும் அங்கம் வகிக்கின்றனர். இவர்களை தவிர இந்நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பணியாளர்களும், தன்னார்வலர்களும் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர்.

இந்நிறுவன மேலாளர் திருமதி.சேதுலட்சுமி அவர்களிடம், கொரோனா சூழ்நிலையில வெளியே போகும்போது கொரோனா நம்மை பாதிக்கும் அப்படின்னு பயம் இல்லையா? ஒய் வி ஆர் டூயிங் திஸ் அப்படின்னா என்ன சொல்லுவீங்க என்று கேட்ட போது, பயம் அப்டின்னு எங்களுக்கு எதுவும் கிடையாது. ஆனா எங்களுக்கு எங்களால மத்தவங்களுக்கு நோய்த்தொற்று வந்துடக் கூடாதுன்னு கவனமாக இருக்கோம். அண்ட் அது நான் மட்டும் பதில் சொல்லக்கூடாது. எங்க கூட நிறைய பேரு இருக்காங்க. அவங்க எல்லார் சார்பாக சொல்லலாம் அப்படினா நாங்க ஒரு நன்மை செய்கிறது அது பல பேருக்குப் போய்ச் சேரும் அப்படின்ற நம்பிக்கையில தான் பண்ணிட்டு இருக்கோம். சோ இட் இஸ் ஆக்சுவலி அபவுட் டூயிங் குட் டூ அதர்ஸ் என்று சொன்னார்.

கடைசியாக,”எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மளால ஹெல்ப் பண்ண முடியும். எப்படி ஹெல்ப் பண்ணலாம் அப்டின்றதுக்கு டெபனிஷன் எங்கையுமே கிடையாது. நம்மளால வார்த்தைகளின் மூலமாகவோ, நலம் விசாரித்தல் மூலமாகவோ, பணமாகவோ அல்லது பொருளாகவோ ஏதோ ஒரு முறையில யாருக்காவது உதவமுடியும். சோ ஐ வுட் லைக் என்கரேஜ் பீபிள் டூ ஹெல்ப்.ஏனா இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம்ம எல்லாரும் ஒன்னு சேந்த மட்டும் தான், இதுல இருந்து வெளியே வர முடியும்” என்று சொல்லி முடித்தார்.
ஈக்கோ நிறுவனத்தின் ‘மீல் பார் ஆல்’ பிரச்சாரம் வெற்றியடையவும், ஈக்கோ நிறுவனம் தன் மக்கள் சேவையைத் தொடரவும் நான் மீடியா மகிழ்ந்த மனதுடன் வாழ்த்துகிறது.
  • செல்வமுருகன்.ந

Right Click & View Source is disabled.

error: Content is protected !!