சினிமா

மீனா, ரஜினிக்கு அக்காவா? இதென்னடா அண்ணாத்த கொடுமை

97views

வருகின்ற தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

விஸ்வாசம் படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அந்தவகையில் பக்கா மாஸ் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் 90s ஹீரோயின்களான குஷ்பு மீனா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் சதீஷ் சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மாமன் மகள்களாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்து வருவதாக கூறினார்கள். ஆனால் தற்போது கதையே வேறு என்கிறார்கள் நெட்டிசன்கள்.

உண்மையாகவே மீனா ரஜினிக்கு என்ன உறவுமுறையில் வரப்போகிறார் என்பது படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அண்ணா திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாக மீனா நடிக்கிறார் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டனர்.

ஏற்கனவே நயன்தாராவுடன் ரொமான்ஸ் பாடல் ஒன்றில் நடித்ததால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நெட்டிசன்கள் ஒரு பக்கம் தங்கள் இஷ்டத்திற்கு கலாய்த்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது படத்திற்கும் பெரிய நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

இந்த செய்தி எல்லாம் எங்கிருந்து வருகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்செட்டில் உள்ளதாம். இப்படிப்பட்ட படங்கள் நல்ல படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என்பதால் இதுபோன்ற வதந்திகளை வெகு சீக்கிரத்தில் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் வேலை செய்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!