இந்தியா

மீண்டும் தலைதூக்கம் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

58views

கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கோவிட் பரவல் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியுள்ளன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா, மிசோரம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், மேற்கண்ட மாநிலங்களில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அம்மாநிலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த இரு மாதங்களாக நாட்டின் கோவிட்-19 பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதேவேளை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2,321 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் புதிய பாதிப்புகளில் 31.8 சதவீதமாகும். மேலும் கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதமும் 13.45 சதவீதத்திலிருந்து 15.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் மிசோரம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 814 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் ஒரே வாரத்தில் 794 புதிய பாதிப்புகளும், டெல்லியில் 724 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளது.

இந்த அனைத்து மாநிலங்களும் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட்டும் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்கள் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, விதிமுறைகளை பின்பற்றல் என 5 யுக்திகளை பயன்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டியுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து பயணிகளின் பரிசோதனை மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தி உருமாறிய கோவிட் பரவல் தென்படுகிறதா என்பதையும் மேற்கொண்ட மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் இன்று புதிதாக 1,150 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் 83 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 11,365 தற்போது சிகிச்சையில் உள்ளனர். நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!