உலகம்

மியான்மா்: ஆங் சான் சூகி கட்சி எம்.பி.க்கு மரண தண்டனை

155views

மியான்மரில் ஜனநாயகத் தலைவா் ஆங் சான் சூகியின் கட்சியைச் சோந்த முன்னாள் எம்.பி.

பியோ ஸெயாா்தாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பியோ ஸெயாா்தாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிது. தேசிய ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அவா், பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸெயா்தாவின் நடத்தி வந்த இசைக்குழு ராணுவ ஆட்சிக்கு எதிராக இசைப் பாடல்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவா், கடந்த 2012 தோதலில் எம்.பி.யாகத் தோந்தெடுக்கப்பட்டாா்.

மியான்மரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி, அவரது தேசிய ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். சூகி உள்ளிட்டோா் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், ஆங் சான் சூகிக்கு சில வழக்குகளில் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது கட்சியைச் சோந்த பியோ ஸெயாா்தாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!